நியூயார்க் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி ஆப்கான் நாட்டவர்?

Report Print Kumutha Kumutha in அமெரிக்கா

நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் சூத்திரதாரி ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அஹமட் கான் ரஹாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த குண்டுவெடிப்பில் 29 பேர் காயமடைந்திருந்தனர்.

இதேவேளை இன்று அமெரிக்காவின் நியுஜெர்சியில் சந்தேகத்திடற்கிடமான பையொன்றில் 5 குண்டுகள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குண்டுகளானது குண்டு

செயலிழக்கும் ரோபோவினால் செயலழிக்கப்பட்டபோது அது வெடித்ததாகவும், இதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சந்தேகநபரைத் தேடி FBI அதிகாரிகளால் நியுஜேர்சி மாநிலத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பொதுமக்களின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments