கள்ளத்தொடர்பு தான் காரணம்! உண்மையை போட்டு உடைத்த ஏஞ்சலினா ஜூலி

Report Print Santhan in அமெரிக்கா

பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஏஞ்சலினா ஜூலி, பிராட் பிட் பிரிந்ததற்கு கள்ளத்தொடர்பு தான் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரி பிரபல ஹாலிவுட் நடிகையும், பிராட்டின் மனைவியுமான ஏஞ்சலினா ஜூலி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

விவாகரத்திற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், பிராட் அளவுக்கு அதிகமாக குடித்து வருவதாகவும், அதிக அளவு போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும், இதனால் அவரை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது எனவும் கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் தற்போது பிராட் பிட் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் மரியான் கோட்டில்லார்ட்டுக்கும், பிராட்டிற்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், இதைத் துப்பறியும் நிபுணர்கள் கொண்டு தான் கண்டுபிடித்ததாகவும் ஜூலி தெரிவித்துள்ளார்.

இக்கள்ளத்தொடர்பு உறுதியான பின்னரே தான் விவாகரத்து செய்ய முடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கு பிராட் பிட் நான் நல்ல தந்தையாக இருக்க முடியாது என கூறியிருப்பது தனக்கு வருத்தமளிக்கிறது என்றும் ஜூலியிடம் பெரியவர்கள் போல் நடந்து கொள் என கூறியும் அவர் வெளிப்படையாக விவாகாரத்து கோரியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments