புலம்பெயர்ந்த மக்களின் கலங்கரை விளக்கம் அகிலன் அருளானந்தம்

Report Print Maru Maru in அமெரிக்கா

அமெரிக்காவில் வாழும் அகதிகளுக்கு சட்டரீதியான பிரச்சினைகளில் சேவை மனதோடு உதவுவதை தனது வாழ்நாள் பணியாக வைத்திருப்பவர் சட்ட மேதையான அகிலன் அருளானந்தம்(43).

மேதை மானியம் பரிசு

அவர் அந்த பணியின் ஒரு பகுதியாக 625,000 டாலர் மதிப்புள்ள பரிசுகளை, புலம்பெயர் குழந்தைகளுக்காக நல்ல செயல்கள் மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இது புலம்பெயர்ந்த மக்களின் அடுத்த தலைமுறையை ஒரு சிறந்த வளர்ச்சியை நோக்கி உற்சாகப்படுத்தும் பணி என்றால் அது மிகை அல்ல. இதை ஒரு மேதை நடவடிக்கையாகவே புலம்பெயர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஆனால், ஒருவரும் இந்த மானியத்தை பெற விண்ணப்பிக்கவில்லை. இந்த ஆண்டு 23 பேர் மறைமுகமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அறக்கட்டளை தூரத்திலிருந்தே மர்மமான முறையில் தேர்வுசெய்து பிறகு நல்ல செய்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

’மேதை மானியம்’ என அழைக்கப்படும் இதற்கு மெக்கார்தர் அறக்கட்டளை பின்புலமாக உள்ளது. வழக்குரைஞர் அகிலன் அருளானந்தத்தின் வழித்துணையோடு இந்த பிரத்தியேக அமைப்பு பிறநாட்டை சேர்ந்த அகதி குழந்தைகளுக்கு அவர்களுடைய தகுதிக்கு உரிய சான்றுகளோடு தேர்வுசெய்து, இந்த ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளது.

இது எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் உடனடியாக உருவான ஒரு தீர்வுதான் என்கிறார் அருளானந்தம்.

John D. & Catherine T. MacArthur Foundation

அருளானந்தத்தின் மக்கள் பணி

இவர் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள அக்லூவில்(ACLU) சட்ட துணை இயக்குனராக உள்ளார். நாடுகடத்தும் நடவடிக்கைக்கு ஆதரவற்ற புலம்பெயர்ந்த குழந்தைகளை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி வழக்கு வேலை இவருடைய தற்போதைய பணி. அவருடைய அலுவலகம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ளது.

இந்த கூட்டுறவு பரிசு கடந்த வியாழக்கிழமைதான் அறிவிக்கப்பட்டது. இதை கசப்பும் இனிப்புமான செய்தியாக அவர் கருதுகிறார். காரணம், அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்புதான் மத்திய அமெரிக்காவில் நடைபெறும் வன்முறையால், தப்பி ஓட முயலும் புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு சட்ட பிரதிநிதித்துவ உத்திரவாதம் வழங்கக் கோரிய வர்க்க நடவடிக்கை வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது அந்த வழக்கிற்கான பின்னடைவுதான். அந்த நிலையில் இந்த தகவல் மானியம் அல்ல, ஒரு ஆறுதல் பரிசு என்கிறார்.

இந்த விருதை பெறுவதன் மூலம் உண்மையாக குழந்தைகளுக்கு நல்ல இதயத்துடிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று ஒரு தொலைபேசி பேட்டியில் கூறியுள்ளார்.

ஆளாக்கிய அனுபவங்கள்

அகதிகளின் குடியேற்ற உரிமைகளுக்காக பணிசெய்வது கடினமானது. அதேசமயம், மக்களுக்கு அந்தஸ்தை பெற்றுத்தருகிறோம் ஒரு அடித்தளத்தை உருவாக்கிக் கொடுக்கிறோம் என்று, பணியின் முக்கியத்துவத்தை நினைக்கிறபோது ஊக்கமே ஊறுகிறது என்கிறார்.

அகிலன் அருளானந்தம் தனக்கு 10 வயதாக இருக்கும்போது, இலங்கையில் நடந்த போருக்கு தப்பி குடும்பத்தினருடன் தெற்கு கலிபோர்னியாவில் குடியேறியவர்.

அதனால், மனித உரிமைகள், அகதிகள் உரிமைகள், புலம்பெயர்ந்தவர்கள் உரிமைகளை பாதுகாக்கும் பணியை தனது லட்சிய வேலையாக படித்து ஏற்படுத்திக்கொண்டார்.

நான் அகதிகளுக்குதான் முன்னுரிமை அளிக்கிறேன். அவர்களை எனது சொந்தங்களாக நினைக்கிறேன். நாங்கள் இங்கு குடியேறியபோது, இருந்த சிரமங்கள் தெரியும். அகதி குழந்தைகளை நான் இங்கு வந்தபோது இருந்த ஒத்த வயதாக இருப்பதால் சகோதரர்களாக பார்க்கிறேன் எகிறார்.

வன்முறைக்கு தப்பியோடிய மக்களின் பாதுகாப்பு உரிமைகளுக்கு ஒரு பாதையை தீர்மானித்துக்கொடுக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குகிறார்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆயிரக்கணக்கானவர்கள் குடியேறியுள்ளனர்., செயல்முறை காரணம் இல்லாமல், எந்த மனிதனும் தங்கள் சுதந்திரத்தை இழக்க வேண்டியதில்லை என்பதற்கு பாதுகாப்பு உத்திரவாதம் சட்டத்தின் ஐந்தாவது திருத்தத்தில் உள்ளது என்கிறார்.

625,000 டாலர் பரிசை மேற்கூறிய முறைப்படி செயல்படுத்த போதுமான நேரம் இல்லை. அதில் ஒரு பகுதியை இலங்கையில் மனித உரிமை பணிக்கு செலவிடலாம். அதற்கு அங்கு நிதி சுதந்திர குறைவால் அர்ப்பணிப்பு நேரம் அதிகமாகும் என்கிறார்.

இலங்கையில் மனித உரிமைகள் ஆதரவுக்காக ஆழ்ந்து சிந்திக்கிறேன். அதில் ஆழமான அக்கறையும் உண்டு. ஆனால், இங்கு என்னுடைய இந்த வேலை ஒதுக்க முடிந்தது அல்ல.

மேலும், இலங்கையில் உள்ளதைவிட அதிகமான அகதிகள் நலப்பணி அமெரிக்காவில் முடிக்க வேண்டியுள்ளது என உருக்கமாக கூறினார்.

John D. & Catherine T. MacArthur Foundation

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments