அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 8 இந்தியர்கள் கைது!

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் கடலோர மாகாணமான பியூர்டோ ரிகோவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 8 இந்தியர்களை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அமெரிக்காவின் கடலோர மாகாணமான பியூர்டோ ரிகோவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 11 பேரை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் சுங்கத்துறை எல்லைப்பாதுகாப்பு (CBP) பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டிள்ளனர். கைதானவர்களில் 8 பேர் இந்தியவை சேர்ந்தவர்கள் எனவும், 3 பேர் டோமானிய நாட்டைச்சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தனர்.

கருங்கடல் தீவுகள் வழியாக ஆவணங்கள் எதுவும் இன்றி மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் ராமே எல்லைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதியும் எல்லை பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சட்ட விரோதமாக குடியேற முயன்ற 20 பேரை கைது செய்தனர். இவர்களில் 13 பேர் டோமானிய நாட்டைசேர்ந்தவர்கள் ஆவர். 7 பேர் இந்தியர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments