ஹிலாரி கிளிண்டன் இப்படிப்பட்டவரா? வெளியான புகைப்படங்கள்

Report Print Maru Maru in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டனுக்கு இடையிலான மோதலின் உச்சக்கட்டமாக அவரது குணாதிசியங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

அதில், 20 புகைப்படங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளன. அவற்றில் கிளிண்டன் பல பெண்களுடன் நெருக்கமாக அணைத்தபடி நிற்பது, கிளிண்டன் மோனிகாவுடன் நேசமாக இருக்கும் புகைப்படங்கள், அதிர்ச்சியளிக்கும் படியான, ஹிலாரியும் டிரம்பும் இளமையில் நண்பர்களாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம், ஹிலாரி கையில் மதுவோடு ஆண் நண்பர்களோடு ’சியர்ஸ்’ சொல்லும் புகைப்படம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சை கட்டியணைத்த மற்றும் இன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு முத்தம் கொடுக்கும் படங்கள்.

மேலும், அமெரிக்க பிரஜையாக இல்லாதிருந்தால், நான் அரபு நாட்டின் இளவரசியாகி இருப்பேன் என கூறியவர் ஹிலாரி. அதற்கு ஏற்ப சவுதி, மற்றும் வளைகுடா நாடுகளின் மன்னர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

நான் எப்போதும் இஸ்ரேலுக்கு ஆதராவாக இருப்பேன் என கூறும் ஹிலாரி பாலஸ்தீனத்தின் புரட்சி தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என, பல அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

இது ஹிலாரியின் செல்வாக்கை குறைக்க செய்யப்பட்ட ஒரு போட்டி நடவடிக்கை என்றாலும் ஹிலாரியின் செல்வாக்கு சரிவதற்கான சரியான காரணங்கள் அந்த படங்களுக்கு பின்னால் செய்தியாக உள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments