நடுரோட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்த இளம் ஜோடி: வீடியோ வெளியானது

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் அளவுக்கதிமான ஹெராயின் பயன்படுத்தியதால் சுயநினைவை இழந்த இளம் தம்பதியர் காரில் மயங்கி கிடந்த காட்சியை நபர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

ஓகியோவின் West Toledo என்ற பகுதியில் கார் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறான வகையில் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது, அந்த பக்கமாக வந்த Tyler Rieger என்ற நபர், காரை திறந்து பார்த்தபோது, அதற்குள் இளம் வயது தம்பதியரான Taylor Swartzlander (24) Haley Kirkendall (22) ஆகிய இருவரும் சுயநினைவை இழந்து கிடந்துள்ளனர்.

அவர்களுக்கு அருகாமையில் துரித உணவுகள் மற்றும் ஹெராயின் பயன்படுத்திய ஊசிகள் போன்றவை கிடந்துள்ளன. அளவுக்கதிகமான ஹெராயின் பயன்படுத்திய காரணத்தால் தான் இவர்கள் சுயநினைவை இழந்துள்ளனர் என்பதை அறிந்த இந்நபர், அவர்கள் இருவரையும் வீடியோ எடுத்துள்ளார்.

அதன்பிறகு, இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தான் எடுத்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ள அவர், இதன் மூலம் அதிகமான லைக்குகைளை பெற வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.

ஓகியோ மாநிலத்தில் ஹெராயின் என்பது தொற்றுநோய் போன்று பரவி வருகிறது. மக்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். ஹெராயின் பயன்டுத்தி உயிரிழந்தவர்களின் வரிசையில் எனது நண்பர்களும் அடங்குவர்.

கடந்த ஆண்டு மட்டும் ஓகியோ மாநிலத்தில் 3,000 பேர் ஹெராயின் பயன்படுத்தியால் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்து அந்த இளம் வயது தம்பதியர் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

கடந்த மாதம் ஓகியோவில் குழந்தைகள் அடங்கிய குடும்பத்தினர் ஹெராயின் பயன்படுத்திய காரணத்தால் காருக்குள் மயங்கி கிடந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments