உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தை இது தான்: ஏன் தெரியுமா?

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்க நாட்டில் பிறந்த பெண் குழந்தை ஒன்று ‘உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தை’ என்ற பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

மினிசொட்டா மாகாணத்தில் டேவிட் மற்றும் லாரன் என்ற தம்பதி வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2014ம் ஆண்டு லாரன் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

எனினும், பல்வேறு உடல்நலக்குறைவு காரணமாக லாரன் பிரசவத்திற்கு முன்னதாகவே பல பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வந்துள்ளார்.

28 வாரங்கள் முடிந்த நிலையில் லாரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் குழந்தைக்கு இதய துடிப்பு சீராக இல்லை என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

மேலும், குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக குழந்தை பிறக்கும் என்பதால் தைரியமாக இருக்க வேண்டும் என லாரனுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பொதுவாக, குழந்தை பிறக்கும்போது 2.5 முதல் 5 கிலோ எடை இருந்தால் தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுவார்கள்.

ஆனால், லாரனுக்கு பிறந்த குழந்தை 1.7 கிலோ எடை மட்டுமே இருந்ததால் பெற்றோர் மிகவும் கவலையில் ஆழ்ந்தனர். மேலும், குழந்தையின் எதிர்காலத்தை எண்ணி மிகவும் வேதனை அடைந்தனர்.

இந்நிலையில், குழந்தை பிறந்து சரியாக 5 நாட்களுக்கு பிறகு ‘உன்னை புகைப்படம் எடுத்து அப்பாவுக்கு அனுப்பலாமா?’ என தனது குழந்தையிடம் லாரன் பேசியுள்ளார்.

தாயார் பேசியதை கேட்ட அக்குழந்தை திடீரென முகமெல்லாம் பிரகாசம் மலர குபீரென வாய்விட்டு சிரித்துள்ளது. தனது குழந்தை சிரித்ததை லாரன் தவறாமல் புகைப்படம் எடுத்துள்ளார்.

பொதுவாக, பிறந்த குழந்தை 5 நாட்களில் சிரிப்பது என்பது மிகவும் அரிதாகவே நிகழும். ஆனால், பிரசவ திகதிக்கு முன்னதாகவே பிறந்த அந்த குழந்தை தாயாருக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் வாய் விட்டு சிரித்துள்ளது பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லாரன் தனது குழந்தைக்கு பெரயா எனப்பெயரிட்டு அப்புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வரை 3 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளதுடன் ‘இது தான் உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தை’ எனக் கூறி சுமார் 35 ஆயிரம் பேர் அப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments