டொனால்ட் டிரம்பின் உருவ பொம்மையை திருடிய நபரை கண்டுபிடித்தால் ரூ.7 லட்சம் பரிசு

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்பின் உருவ பொம்மையை திருடிய நபரை கைது செய்ய உதவும் நபருக்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு பொலிசார் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் 8-ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார்.

நாடு முழுவதும் தற்போது பிரச்சாரங்கள் நடைபெற்று வருவதால் டொனால்ட் டிரம்பின் உருவ பொம்மைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நியூயோர்க் நகரில் உள்ள Holbrook என்ற பகுதியில் டொனால்ட் டிரம்பின் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் 21ம் திகதி இச்சாலை வழியாக சென்ற நபர் ஒருவர் டொனால்ட் டிரம்பின் உருவ பொம்மை ஒன்றை திருடிக்கொண்டு சென்றுள்ளார்.

இக்காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

இவ்வீடியோவை வெளியிட்டுள்ள பொலிசார் ‘டொனால்ட் டிரம்பின் உருவ பொம்மையை திருடிய நபரை கண்டுபிடிக்க உதவினால் அவருக்கு 5,000 டொலர்(7,36,400 இலங்கை ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments