அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாது: முடிவை மாற்றிய பிரபல நடிகர்

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் அந்நாட்டை விட்டு வெளியேறுவேன் என்ற அறிவிப்பை பிரபல நடிகர் ஒருவர் திரும்ப பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டபோது அவருக்கு பல்வேறு நடிகர்கள், நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

’ஜுராசிக் பார்க்’, ‘கேப்டன் அமெரிக்கா’, ‘தி அவென்ஜர்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களில் நடித்த சாமுவேல் எல் ஜாக்சன் என்ற நடிகர் ஒரு அதிரடி கருத்தை வெளியிட்டார்.

‘டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், அமெரிக்காவை விட்டு வெளியே தென் ஆப்பிரிக்காவில் குடியேறுவேன்’ என பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் நடந்து முடிந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் ‘நீங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறவில்லையா?’ என பல பேர் நடிகரின் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மெளனம் காத்து வந்த நடிகர் நேற்று முன் தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அதிரடி பதிலை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘நான் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என ஏன் அனைவரும் ஆர்வமாக இருக்கிறீர்கள்? உங்கள் அனைவரையும் விட நான் தான் அதிகமாக வரியை கட்டி வருகிறேன்’ என தடாலடியாக பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்காவை விட்டு வெளியேறும் முடிவினை அவர் மாற்றிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments