நடுவானில் துடிதுடித்த இளம்பெண்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்- ஏன் தெரியுமா?

Report Print Jubilee Jubilee in அமெரிக்கா

அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பறக்கும் விமானத்திலே தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான 556 என்ற விமானம் பென்ஸ்யிலவனியா மாகாணத்தின் Philadelphia நகரில் இருந்து புளோரிடாவின் Orlando நகருக்கு சென்றது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போதே விமானத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார்.

விமானத்தில் இருந்த மருத்துவ குழு அவருக்கு விமானத்திலே பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் அவருக்கு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது.

இதைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு அந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக Orlando நகருக்கு சென்றது அந்த விமானம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments