குட்டை பாவாடையுடன் வந்த ஜனாதிபதியின் மனைவி: மீண்டும் சர்ச்சையில் மெலானியா டிரம்ப்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பும் அவர் மனைவி மெலானியா டிரம்பும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக அமெரிக்காவின் Florida மாநிலத்தில் அமைந்துள்ள Episcopal தேவாலத்திற்கு வந்தார்கள்.

டொனால்ட் டிரம்ப் தேவாலத்துக்குள் நுழைந்தவுடன் தேவாலய சபையில் கூடியிருந்த மக்கள் அவரை கைதட்டி உற்சாகமாக வரவேற்றார்கள்.

டொனால்ட் டிரம்புடன் வந்த அவர் மனைவி மெலானியா ஊதா நிறத்தில் குட்டை பாவாடை அணிந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டிரம்ப் என்னும் பிரபலம் அங்கு வந்ததால் கிறிஸ்துமஸ் பண்டிகை மேலும் அங்கு களைகட்டி காணப்பட்டது.

எப்போதும் இந்த Episcopal தேவாலயமானது டொனால்ட் டிரம்புக்கும் அவர் மனைவி மெலானியா டிரம்புக்கும் மனதுக்கு நெருக்கமானதாக இருந்துள்ளது. காரணம் இருவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு இங்கு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments