தூங்கிய தாயாரை ஏமாற்றி சிறுமி செய்த செயல் என்ன தெரியுமா? வங்கிக் கணக்கில் ரூ.37,500 மாயம்!

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் தூங்கிய தாயாரின் விரல் அடையாளத்தை பயன்படுத்தி சிறுமி ஒருவர் 250 டொலர் மதிப்பிலான பொக்கொமான் பரிசுப்பொருட்களை வாங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாநிலத்தில் தாயாருடன் குடியிருக்கும் 6 வயது சிறுமி தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்.

குறித்த சம்பவத்தின்போது சிறுமியின் தாயார் பெதானி ஹோவல், தொடர்பே இல்லாமல் 13 அறிவிப்புகள் குறித்த இணையத்தள விற்பனை நிறுவனத்தில் இருந்து வந்தபோது, குறித்த நிறுவனத்தில் தமக்கிருக்கும் கணக்கினை எவரேனும் ஊடுருவியதாகவே கருதியுள்ளார்.

பின்னர்தான் தமது 6 வயது மகள் குறித்த விவகாரம் தொடர்பில் நடந்தவற்றை தாயாரிடம் கூறியுள்ளார்.

குறித்த நிறுவனத்தின் மொபைல் செயலியை தாயார் பயன்படுத்தி வந்துள்ளார். பாதுகாப்பு கருதி தனது விரல் அடையாளத்தையும் பொருள் வாங்குவதற்கான உறுதியை தெரிவிப்பதற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

இதையே கவனித்து வந்த சிறுமி, தாயார் அயர்ந்து தூங்கும் நேரம் பார்த்து 250 டொலர் (இலங்கை மதிப்பில் ரூ.37422.50) மதிப்பிலான பொக்கொமான் பரிசுப்பொருட்கள் 13 எண்ணிக்கையில் வாங்கிக் குவித்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கடிந்து கொண்ட தாயாரை, இல்லை அம்மா, நான் ஷாப்பிங் செய்தேன் என அந்த சிறுமி அழகு காட்டியுள்ளதாக குறித்த தாயாரே செய்தி ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறித்த நிறுவனத்திடம் முறையிட்டதில் அவர்கள் 13 பொருட்களில் நான்கினை மட்டும் திருப்பி எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments