கழிவறையால் அவசரமாக திசை திருப்பப்பட்ட பயணிகள் விமானம்

Report Print Peterson Peterson in அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில் கழிவறை பிரச்சனை ஏற்பட்டதால் விமானம் அவசரமாக வேறு நாட்டில் தரையிறங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் இருந்து பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸிற்கு OpenSkies என்ற விமானம் நேற்று முன் தினம் புறப்பட்டுள்ளது.

விமானிகள் உள்பட 172 பயணிகளுடன் புறப்பட்ட இவ்விமானத்தில் திடீரென பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த கழிவறையில் பிரச்சனை ஏற்பட்டதால் அதனை பயன்படுத்த முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகள் சிலர் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என விமானிகளிடம் கூறியுள்ளனர்.

நிலைமையை உணர்ந்த விமானிகள் வேறு வழியின்றி ஐயர்லாந்து நாட்டிற்கு விமானம் திசை திருப்பப்பட்டது.

ஐயர்லாந்து நாட்டில் உள்ள Shannon விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பயணிகள் அங்குள்ள கழிவறையை பயன்படுத்தியுள்ளனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த பொறியாளர்கள் உடனடியாக விமானத்தில் உள்ள கழிவறை பிரச்சனையை சரி செய்துள்ளனர்.

பின்னர், பயணிகள் அனைவரும் மீண்டும் விமானத்தில் அமர்ந்த பிறகு சுமார் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு விமானம் பாரீஸ் நகருக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments