இஸ்லாமியர்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்!

Report Print Arbin Arbin in அமெரிக்கா
1358Shares
1358Shares
ibctamil.com

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்லாமிய நாடுகள் சிலவற்றுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் மசூதி ஒன்றிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் விக்டோரியா நகரில் உள்ள மசூதிக்கு சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

மசூதியில் இருந்து கரும்புகை எழுவதை பார்த்த ஒருவர் உடனே அருகாமையில் அமைந்துள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து நான்கு மணிநேரம் போராடிய தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் அதற்குள் மசூதி முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டது. மசூதியில் தீ பிடித்தால் எச்சரிக்கும் அலாரமை மர்ம நபர்கள் அணைத்து வைத்துவிட்டதாகவும், கதவை திறந்து வைத்ததாகவும் இமாம் ஹஸ்மி தெரிவித்துள்ளார்.

2000ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதியில் கடந்த 21ம் திகதி தான் கொள்ளை சம்பவம் நடந்தது. மர்ம நபர்கள் சிலர் மசூதிக்குள் புகுந்து மடிக்கணனி உள்ளிட்ட முக்கிய பொருட்களை திருடிச் சென்றனர்.

மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு காரணமாக இந்த மசூதி குறிவைக்கப்பட்டது. 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்த சில மணிநேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments