23 வருடங்களாக... மருத்துவரின் நெகிழ வைக்கும் செயல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் ஆதரவற்றவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்கு மட்டும் மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்துவருகிறார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் பகுதில் ஆதரவற்றவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களின் கடவுளாக பார்க்கப்படுகிறார் மருத்துவர் ஜிம் விதர்ஸ்.

முதுகில் சுமந்த பை ஒன்றுடன் தெரு வீதிகளில் இறங்கி ஆதரவற்றவர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதை விதர்ஸ் கடந்த 23 ஆண்டுகளாக செய்து வருகிறார்.

மருத்துவரான தந்தையுடன் தமது சிறு வயதிலேயே ஆதரவற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்றுள்ளதாக கூறும் விதர்ஸ், மருத்துவ துறையில் கல்வி கற்பிப்பதே ஒரு தூய பணி எனவும், அதை முழு மனதுடன் விரும்பி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான பல கொடுமைகளை மருத்துவமனையில் நேரில் சந்திக்க நேர்ந்ததை சுட்டிக்காட்டும் விதர்ஸ், அதே சூழல் அமெரிக்காவின் உள்ளூர் பகுதிகளிலும் கண்கூடாக காண நேர்ந்ததை குறிப்பிட்டார்.

துவக்க காலத்தில் வாரத்தில் இரண்டு அல்லது 3 நாட்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க சென்றதாக கூறும் மருத்துவர் விதர்ஸ், கடந்த 23 ஆண்டுகளாக தமது தொண்டு நிறுவனமானது மருத்துவ அதிகாரிகள், சட்ட ஆலோசனை வழங்கும் பிரிவு, வீடிழந்தவர்களுக்கான உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது ஒவ்வொரு நாளும் மருத்துவ சேவை அளிக்க தெருவெங்கும் சென்று உரியவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறும் விதர்ஸ், பனிக்காலங்களில் ஆதரவற்றவர்களுக்காக தங்கும் வசதியும் ஏற்பாடு செய்து அவர்களுக்கு மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மக்களிடம் சென்றால் சிக்கலான தருணங்களை கடந்து செல்வது குறித்து அவர்கள் கற்றுத்தருவார்கள் என கூறும் மருத்துவர் விதர்ஸ், இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என்றார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments