இதை பார்த்தாலே தலைசுற்றும்: தில்லானவர்களுக்கு மட்டும் அனுமதி

Report Print Arbin Arbin in அமெரிக்கா
618Shares
618Shares
ibctamil.com

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் கண்ணாடியிலான நீச்சல் குளம் ஒன்றை அமைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் குறித்த கண்ணாடி நீச்சல் குளம் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் 40-வது மாடியில் இருந்து வெளியே துருத்திய நிலையில் குறித்த நீச்சல் குளம் அமைந்துள்ளது.

8 அங்குல தடித்த கண்ணாடியினால் ஆன இந்த நீச்சல் குளமானது கட்டிடத்தில் இருந்து 10 அடி வெளியே அந்தரத்தில் அமைந்துள்ளது.

டெக்சாஸ் மாகாணத்திலேயே மிகவும் உயரத்தில் அமைந்துள்ள நீச்சல் குளம் என அறியப்படும் இந்த கண்ணாடி குளமானது தில்லானவர்களுக்கு மட்டுமே அனுமதி என குறும்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட இந்த நீச்சல் குளமானது இதுவரையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments