மெலேனியா குறித்து ஆபாச வார்த்தை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Raju Raju in அமெரிக்கா

மெலேனியா டிரம்ப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்ட நாளிதழ் $2.9 மில்லியன் அபராத தொகையை மெலேனியாவுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலேனியா பற்றி Daily Mail என்னும் ஆங்கில நாளிதழ் தவறாக செய்தி வெளியிட்டது.

அதாவது, மெலேனியா டிரம்பை திருமணம் செய்வதற்கு முன்னர் மொடலிங் செய்வதை முழு நேர தொழிலாக செய்தார் எனவும் அவர் ஒரு Hooker (Prostitute) எனவும் கொச்சை வார்த்தைகளில் அவதூறு பரப்பியிருந்தது.

இதுகுறித்து மெலேனியா நீதிமன்றத்தில் Daily Mail தன்னை பற்றி பொய்யாக பிரசாரம் செய்வதாகவும் இதற்கு $150 மில்லியன் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கடந்த வருடம் செப்டம்பர் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது நீதிமன்றம் Daily Mail நிறுவனம் மெலேனியாவுக்கு $2.9 மில்லியன் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கூறியுள்ள Daily Mail, எங்கள் செய்தியால் மெலேனியா கஷ்டப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கிறோம்.

நாங்கள் அவரை பற்றி கூறிய வார்த்தைகளை திரும்ப பெறுகிறோம் என தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments