இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்: அதிர வைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் இன்ஸ்டாகிராம் நேரலையில் தவறுதலாக சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குடும்ப உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜார்ஜியா மாகாணத்தில் அமைந்துள்ள அட்லாண்டா நகரில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Malachi Hemphill என்ற 13 வயது சிறுவன் தமது நண்பர்களுடன் சமூக வலைதளமான இன்ஸ்டாலிராமில் நேரலையில் அரட்டை அடித்து சேட் செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென்று அந்த சிறுவனின் படுக்கை அறையில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அச்சிறுவனின் தாயார் துப்பாக்கி சத்தம் கேட்ட படுக்கை அறைக்கு விரைந்து சென்று பார்க்கும்போது, சிறுவன் தரையில் சரிந்து விழுந்து கிடந்துள்ளான்.

தலையில் குண்டடிப்பட்டு 13 வயது சிறுவன் சரிந்து விழுந்து கிடக்கும் காட்சி எந்த ஒரு தாயாருக்கும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத காட்சி என, சிறுவனின் தாயார் தழுதழுத்த குரலில் தெரிவித்துள்ளார்.

இதைவிட கொடுமையான தருணம் என்னவென்றால், அடக்கம் செய்ய எந்த வண்ணத்தில் பெட்டி வேண்டும் என அந்த கடைக்காரர் கேட்டது தான் என கண்ணீர் மல்க அந்த தாயார் தெரிவித்துள்ளார்.

தனது நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் துப்பாக்கியை காட்டி விளையாட்டாக பேசிக்கொண்டிருந்த Malachi தவறுதலாக விசையை அழுத்தி தானே சுட்டுக் கொண்டுள்ளார்.

மட்டுமின்றி குறித்த படுக்கை அறையை பூட்டி விட்டு Malachi தமது நண்பர்களிடம் சேட் செய்துள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு விரைந்து வந்த அவரது தாயாரும், சகோதரியும் கதவை உடைத்து தான் உள்ளே சென்று பார்க்க முடிந்துள்ளது.

Malachi-ன் இன்ஸ்டாகிராம் நேரலையை அவரது 50க்கும் மேற்பட்ட நண்பர்கள் பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். சிறுவனின் துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து மொத்த நண்பர்களும் Malachi-ன் குடியிருப்புக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Malachi-ன் தாயார் தற்போது அறிவுரையாக கூறுவது, இணையத்தில் சிறுவர்களின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் எந்த பெயர்களில் இயங்குகிறார்கள் அவர்களின் நட்பு வட்டங்கள் எவை என பெற்றோர் அறிந்து வைத்திருப்பது இதுபோன்ற பேரிழப்பு ஏற்படாமல் முறியடிக்கலாம் என்றார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments