டொனால்டு டிரம்ப் இப்படி செய்துட்டாரே: வைரலாகும் வீடியோ

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

ஈஸ்டர் கொண்டாட்டத்தில் தேசியகீதம் பாடப்பட்டபோது தனது கையினை இடது புற மார்பகத்தின் மீது வைப்பதற்கு டொனால்டு டிரம்ப் மறந்துள்ளார்.

ஈஸ்டர் விழாவையொட்டி டிரம்ப் குடும்பத்தினர், வெள்ளை மாளிகையில் ஈஸ்டர் எக் ரோல் (Easter Egg Roll) என்ற நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தனர்.

இந்த நிகழ்வில் டிரம்ப் தனது மனைவி மற்றும் மகனுடன் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிவின் போது தேசிய கீதம் பாடப்பட்டது.

அமெரிக்காவில் தேசிய கீதம் பாடும்போது அனைவரும் தங்களது கையினை இடது புற மார்பகத்தில் வைத்துக்கொள்வார்கள்.

இது நாட்டுப்பற்றினை குறிப்பதாகும், இந்நிலையில் தேசியகீதம் பாடியபோது டிரம்ப் தனது கையினை இடது மார்பகத்தில் வைக்காமல் நின்றுகொண்டிருந்தார்.

உடனே, மெலேனியா தனது கையினால் டிரம்பின் கையினை தட்டிவிட்டு சைகை கொடுத்துள்ளார்.

அதன்பின்னர், ட்ரம்ப் தனது கையினை இடதுபுற மார்பகத்தில் வைத்துள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்துகொண்டு இந்த விடயத்தை மறந்துவிட்டாரே என நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments