அமெரிக்கா அணு உலையில் விபத்து: அபாய சங்கு ஒலிக்கப்பட்டு பணியாளர்கள் வெளியேற்றம்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள அணு உலையில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் பகுதியில் சுரங்கம் இடிந்து விழுந்ததால் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

வாஷிங்டன் மாநிலத்தில் ஹான்போர்ட் அணு உற்பத்தி தொழிற்சாலையிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 1987ம் ஆண்டு மூடப்பட்ட தொழிற்சாலையிலிருந்து அணுக்கழிவுகள் அனைத்தும் பூமியின் அடியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை கொண்டு செல்லும் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, பணியாளர்கள் அனைவரும் அவரசரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுரங்கத்தின் பாதுகாப்பு கதவுகள் உடனடியாக மூடப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments