சிறுமி தற்கொலையை வீடியோவாக பதிவு செய்து ரசித்த இளைஞன்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் 18 வயது இளைஞன் ஒருவன் சிறுமியின் தற்கொலைக்கு உதவி செய்து துடிக்க துடிக்க உயிரிழப்பதை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Utah நகரின் Spanish Fork பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இக்குற்ற செயலில் ஈடுபட்ட Tyerell Joe Przybycien என்ற இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மரம் ஒன்றில் சிறுமி தூக்கிட்டு தொங்கியதை கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றிய பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, தானாக முன்வந்த தகவலளித்த Tyerell Joe Przybycien, சிறுமி தற்கொலை செய்ய தாம் தான் உதவியதாக ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் Tyerell Joe Przybycien தான் தற்கொலைக்கான பொருட்களை வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட Tyerell Joe Przybycien பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments