உண்மையை சொன்ன திருநங்கை: 119 முறை குத்தி கொலை செய்த இளைஞர்

Report Print Santhan in அமெரிக்கா

ஆணாக இருந்து தான் பெண்ணாக மாறியதாக திருநங்கை உண்மையை கூறியதால், அவர் 119 முறை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் Dwanya Hickerson. இவருக்கும் அங்கு நர்சாக பணிபுரிந்து வரும் Dee Whigham(திருநங்கை) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் இணையத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Dwanya Hickerson அவரை பெண் என்று நினைத்து நெருங்கி பழகியுள்ளார். நான் திருநங்கை என்பதையும் Dee Whigham அவரிடம் சொல்லவில்லை.

இந்நிலையில் இவர்களின் பழக்கம் மிகவும் நெருக்கம் அடையும் அளவிற்கு சென்றதால், அமெரிக்காவின் Mississippi பகுதியில் உள்ள Best Western ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதன் பின்னர் Dee Whigham நான் ஒரு பெண் இல்லை என்றும் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்(திருநங்கை) என்று கூறியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத Dwanya Hickerson ஆத்திரத்தில் அங்கு இருந்த 10 அங்குல நீளம் கொண்ட கத்தியால் அவரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.

இதில் அவரது முகம் சிதைந்து போய்விட்டதாகவும், தொண்டை, மூக்கு போன்ற இடங்களில் அதிக வெட்டுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் அவர் 119 முறை அவரை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். அதன் பின் இது தொடர்பான தகவல் பொலிசாருக்கு தெரியவர உடனடியாக Dwanya Hickerson-ஐ கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் Dwanya Hickerson-க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers