அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகள் சேவையாற்ற முடியாது: டிரம்ப்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைள் எந்த விதத்திலும் சேவையாற்ற முடியாது என்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒபாமா தலைமையிலான நிர்வாகம் அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகள் வெளிப்படையாக சேவை செய்ய அனுமதிக்க முடிவு செய்தது.

அதன் பின் ஆறுமாத காலத்திற்கு பின்னர் திருநங்கைகளை பணியில் சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து குடியரசு கட்சியைச் சேர்ந்த சிலர் திருநங்கைகள் பணியில் அமர்த்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், இராணுவப்படையின் அதிகாரிகள் மற்றும் வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்த பின் அமெரிக்க அரசு எந்த விதத்திலும் திருநங்கைகளை பணியில் ஏற்றுக்கொள்ளவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதிவேற்றம் செய்துள்ளார்.

நமது இராணுவம் தீர்க்கமான மற்றும் மாபெரும் வெற்றிகளை அடைவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர திருநங்கைகளை இராணுவத்தில் சேர்ப்பதால் உண்டாகும் வியக்கத்தக்க மருத்துவ செலவுகள் மற்றும் இடையூறுகளுக்கு உள்ளாகக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த முடிவிற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இராணுவத்தில் சேவையாற்றி வரும் 1.2 மில்லியன் பேரில், 2,450 பேர் திருநங்கைகள் என கடந்த 2016-ஆம் ஆண்டு தி இண்டிபெண்டண்ட் ரேண்ட் கார்போரேசன் கணக்கிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers