அமெரிக்க வெள்ளம்: தமிழர் பகிர்ந்து கொண்ட தகவல்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவில் ஹார்வி சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கடும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹார்வி சூறாவளி காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அந்த மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் 4-வது பெரிய மாநகரமான ஹுஸ்டன் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

அங்கு வசித்து வரும் தமிழர் மகேஷ் என்பவர் பகிர்ந்துகொண்ட தகவல், 72 மணி நேரமாக மழைபெய்து கொண்டிருக்கிறது, 40 இன்ச் மழை பெய்திருக்கிறது.

அதாவது, கிட்டத்தட்ட 100 செமீ பெய்துவிட்டது, வீடுகள் மற்றும் கார்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் படகின் வழியாகவே பயணிக்க வேண்டியள்ளது.

சில இடங்களில் மார்பளவுக்கு தண்ணீர் உள்ளது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடைகள் எதுவும் திறக்கவில்லை, சில இடங்களில் மின்சாரம் இல்லை, மருத்துவமனைகளும் மூடப்பட்டுள்ளதால் சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers