7 மில்லியன் பேர் பார்த்த வீடியோ

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தான் வாங்கிய சொக்லேட்டில் புழுக்கள் இருந்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இவர், வெளியிட்ட இந்த வீடியோவை பேஸ்புக்கில் இதுவரை 7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

ரிச்சல் விலி என்ற பெண்மணி தனது தோழியுடன் சேர்ந்து தனக்கு பிடித்த Rocher chocolate- ஐ வாங்கியுள்ளார். அந்த சொக்லேட்டை பிரித்து பார்க்கையில் அதற்குள் இருந்து புழு வெளியேறியுள்ளது.

இப்படி, ஒவ்வொரு சொக்லேட்டையும் பிரித்து பார்த்தபோது புழுக்கள் வெளியேறியுள்ளது, இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இவர் இனிமேல் இந்த சொக்லேட்டை சாப்பிடவே மாட்டேன்.

இந்த சொக்லேட் பாக்ஸை நான் முன்னரே வாங்கிவிட்டேன், அதிலிருந்த பாதியையும் சாப்பிட்டு விட்டேன். எஞ்சியிருந்ததை சாப்பிட முற்படும்போது தான் புழுக்கள் இருந்ததை பார்த்தேன்.

இந்த சொக்லேட்டை 2018 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி வரை பயன்படுத்தலாம் என அதில் அச்சிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து, இந்த கம்பெனி என்னை தொடர்பு கொள்ளலாம் என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இதுவரை 7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர், இதுகுறித்து விளக்கம் அளித்த கம்பெனி, எங்களது வாடிக்கையாளர்கள் கூறும் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

தற்போது, அந்த வாடிகையாளரை தொடர்பு கொண்டுள்ளோம், அவர் எப்போது வாங்கினார் மற்றும் அவர் அந்த சொக்லேட்டை எந்த மாதிரியான இடத்தில் வைத்திருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்துவோம் என கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers