பிரபல நிறுவனத்தின் சாக்லேட் முழுவதும் புழுக்கள்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் உண்ட சாக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக கூறி வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருப்பது, வைரலாக பரவிவருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ரேச்சல் வைல், பிரபல நிறுவனத்தின் சாக்லேட்டை வாங்கியுள்ளார். அதை சாப்பிடுவதற்காக பிரித்து பார்த்த போது, அந்த சாக்லேட்டில் புழுக்கள் இருந்துள்ளன.

அவர் பிரிக்கும் ஒவ்வொரு சாக்லேட்டிலும் புழுக்கள் இருந்துள்ளன. இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட அவர் இந்த சாக்லேட்டை யாரும் வாங்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இதை அறிந்த சாக்லேட் நிறுவன செய்தி தொடர்பாளர் ரேச்சல் வைல்-ஐ தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அவர், எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட் சுகாதாரமானது. அது குறிப்பிட்ட சூழ்நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். சரியான முறையில் பாதுகாக்கப்படாததே இதற்கு காரணம்.

இதனால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்