வட கொரியா விவகாரத்தை தீர்க்க ஒரு வழி உள்ளது: டொனால்ட் டிரம்ப் தகவல்

Report Print Peterson Peterson in அமெரிக்கா
953Shares
953Shares
lankasrimarket.com

அமெரிக்கா மற்றும் வட கொரியா மத்தியில் நீடித்து வரும் பிரச்சனையை தீர்க்க ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் அசாதாரணமான சூழலால் சர்வதேச அளவில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனைகளை செய்து வருகிறது.

இந்நிலையில், டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சூசகமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அமெரிக்கா மற்றும் வட கொரியா மத்தியில் நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க அமெரிக்க ஜனாதிபதிகள் கடந்த 25 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆனால், இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளது.

வட கொரியா விவகாரத்தை தீர்க்க ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. இந்த ஒரு வழி மட்டுமே அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், டிரம்ப் குறிப்பிட்ட அந்த ஒரு வழியை பற்றி அவர் கூடுதலாக எந்த தகவலும் வெளியிடவில்லை.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவு துறை செயலாளரான ரெக்ஸ் டில்லர்சனுக்கு டிரம்ப் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘உங்களுடைய பலத்தை எல்லாம் சேமித்து வையுங்கள். நாம் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம்’ என சூசகமாக தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இதுபோன்ற டுவீட்டுகள் வட கொரியா மீது போர் தொடுப்பது தான் அந்த ஒரே ஒரு வழியாக இருக்கும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்