அமெரிக்க துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: வெளியான புதிய தகவல்

Report Print Peterson Peterson in அமெரிக்கா
295Shares
295Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு 60 பேரை கொன்ற சம்பவம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வீகஸ் நகரில் கடந்த அக்டோபர் 1-ம் திகதி இசை நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு எதிரே உள்ள மண்டாலி பே என்ற ஹொட்டலில் Stephen Paddock(64) என்ற நபர் மர்மமாக நுழைந்து கூட்டத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நிகழ்த்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் அலறி ஓடிய கூட்டத்தினர் மத்தியில் 60 பேர் பலியானார்கள். சுமார் 500 பேருக்கு காயம் ஏற்பட்டது.

ஹொட்டலை நோக்கி பொலிசார் விரைந்து சென்றபோது, தாக்குதல் நடத்திய நபர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

நபரை பரிசோதனை செய்தபோது ஒரு துண்டிச்சீட்டு பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

அதில், ‘எவ்வளவு தூரத்தில் இருந்து சுட வேண்டும்? எந்த பகுதியில் சுட்டால் அதிகளவு உயிரிழப்பு ஏற்படும் என துள்ளியமாக கணக்கிட்டுள்ளார்.

இத்தகவலை பொலிசார் தற்போது தான் வெளியிட்டுள்ளனர்.

மேலும், தாக்குதல் நடத்திய நபர் மீது முன்னதாக எந்த குற்ற வழக்குகளும் இல்லை.

அதே போல், தாக்குதல் நடத்திய நபரின் சகோதரர் வெளியிட்ட தகவலில் ‘துப்பாக்கியை திறமையாக கையாளும் அளவிற்கு எனது சகோதரனுக்கு அனுபவம் இல்லை’ எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்