அமெரிக்காவின் முடிவால் அதிர்ச்சியில் உலக நாடுகள்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
1714Shares
1714Shares
lankasrimarket.com

பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், யுனெஸ்கோவுக்கும் சில வருடங்களாக மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2011-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, பாலஸ்தீனத்தை அதன் முழு நேர உறுப்பினராக அங்கீகரித்தது.

இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு கொடுக்கும் நிதியையும் நிறுத்திக்கொண்டது.

பின்னர், கடந்த சில வருடங்களாக அமெரிக்காவுக்கும், யுனெஸ்கோவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், யுனெஸ்கோவிலிருந்து விலகிக்கொள்வதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் யுனெஸ்கோவில் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதால் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகிக்கொள்கிறோம் என கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் இரினா போகோவா கூறியுள்ளதாவது, அமெரிக்காவின் இந்த முடிவு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இது உலக அளவிலும், ஐ.நா அமைப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேலும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது, அமெரிக்காவின் இந்த முடிவை துணிச்சலான, அறம் சார்ந்த முடிவு என்று வர்ணித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நீதன்யாகு.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்