செல்லப் பிராணி இறந்ததனால் வினோத நோய்க்கு ஆளான பெண்

Report Print Givitharan Givitharan in அமெரிக்கா

தான் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்குட்டியான மேகா இறந்ததனால் பெண் ஒருவர் இருதய உடைவு நோய்க்கு (Broken Heart Syndrome) உள்ளாகியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Joanie Simpson எனும் குறித்த பெண் மார்பு மற்றும் இடுப்பு வலியினால் அவதிப்பட்டுள்ளார்.

இதனால் மாரடைப்புக்கு அறிகுறி என கருதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது பரிசோதித்த வைத்தியர்களும் ஆரம்பத்தில் மாரடைப்பு என கருதியபோதும் பின்னர் இதய உடைவு நோய் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

62 வயதான அப் பெண்மணி குழந்தைகள் எவரும் அற்ற நிலையில் தனது நாய் குட்டியுடன் தனியாக வசதித்து வந்துள்ளார்.

குழந்தைகளுக்கு நிகராக வளர்த்த நாயின் இழப்பினை தாங்க முடியாது அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளானமையே இவ்வாறு பாதிக்கப்பட காரணம் ஆகும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers