அமெரிக்காவில் சிறுமி ஷெரின் மரணம்: தந்தையின் பகீர் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் நள்ளிரவில் மாயமான 3 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், சிறுமியின் உடலை தந்தையே மறைவு செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரிச்சர்ட்சன் நகரில் வெஸ்லி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் ஷெரின் என்ற அனாதை குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி சிறுமி ஷெரின் மாயமானதாக கூறி அவரது தந்தை பொலிசில் புகார் செய்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஷெரின் பால் குடிக்க மறுத்ததால், தண்டனையாக தங்களது குடியிருப்பின் அருகாமையில் உள்ள மரத்தின் அருகே நள்ளிரவு 3 மணி அளவில் நிற்க வைத்ததாக மேத்யூஸ் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ஆளிள்ளாத விமானம் எனப்படும் ட்ரோன் பயன்படுத்தி தேடினர்.

இருப்பினும் சிறுமியை டெக்சாஸ் பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மேத்யூசுவின் வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக டெக்ஸாஸ் பொலிசார் தெரிவித்தனர்.

அது காணாமல் போன சிறுமியின் உடலாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவ பரிசோதனை நடைபெற்ற நிலையில், அந்த சடலம் காணாமல் போன இந்திய சிறுமியின் உடல் என மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதனையடுத்து மேத்யூசை மீண்டும் கைது செய்த பொலிசார், தனியாக மேற்கொண்ட விசாரணையில், ஷெரினுக்கு இரவு பால் குடிக்கும் போது திடீரென அடைப்பு ஏற்பட்டது.

அதனால் அவள் மயக்கமுற்று விழுந்தாள், பின்னர் இறந்து விட்டாள். ஷெரின் உடலை நான் தான் வெளியே கொண்டு சென்று மறைத்து வைத்தேன்' என பொலிசாரிடம் கூறியுள்ளார்.

சிறுமி ஷெரினை, பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரத்தில் அமைந்துள்ள அனாதை இல்லத்தில் இருந்து மேத்யூஸ் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...