23 வயது பெண்ணுடன் டேட்டிங் செல்ல ஆசைப்பட்ட 77 வயது முதியவர்: நடந்த விபரீதம்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவில் 77 வயது முதியவர் ஒருவர் 23 வயது பெண்ணுடன் டேட்டிங் சென்றபோது அவளுடன் சண்டையிட்டு உடல்ரீதியாக தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

விர்ஜியாவை சேர்ந்த ரிச்சர்ட் ஸ்மித் (77) என்பவர் ஓன்லைன் டேட்டிங் தளம் மூலம் 23 வயது பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் முதல்முறையாக சந்தித்துக்கொண்டபோது, ஸ்மித் அதிக வயதுடையவராக இருப்பதால் நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம், நான் உங்களுடன் டேட்டிங் செய்ய விரும்பவில்லை என ஸ்மித்திடம் அப்பெண் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இருவரும் அருகில் உள்ள ஒரு ஷொப்பிங் மாலுக்கு சென்றுள்ளனர், அங்கு 400 டொலர் மதிப்புள்ள ஒரு ஆடையினை அப்பெண்ணுக்கு ஸ்மித் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ஷொப்பிங் சென்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் இவர்கள் இருவருக்குள்ளும் சிறு பிரச்சனை ஏற்பட்டதால், அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்ற ஸ்மித் நான் வாங்கிகொடுத்த பொருளை எல்லாம் திருப்பி தரவேண்டும் என கேட்டுள்ளார்.

இதில், அனைத்தையும் திருப்பி கொடுத்தாலும், ஸ்மித் வாங்கி கொடுத்த ஒரு சட்டையை அப்பெண் அப்போது அணிந்திருந்த காரணத்தால் அதனை கொடுக்க முடியவில்லை.

ஆனால், ஸ்மித்தோ அதனை உடனடியாக கொடுக்க வேண்டும் என சண்டையிட்டு அப்பெண்ணின் கழுத்தினை நெறித்துள்ளார். இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்மு கழுத்தில் காயம் ஏற்படடுள்ளது.

இதுகுறித்து, அப்பெண் பொலிசில் புகார் அளித்ததையடுத்து முதியவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நவம்பர் 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்