அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: சந்தேகத்தின் பேரில் தீவிரவாதியின் புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பொதுமக்கள் மீது டிரக் மோதி தீவிரவாதி நடத்திய தாக்குலில், சந்தேகத்தின் பேரில் அந்த நபரின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் Manhattan பகுதியின் அருகே மர்ம நபர் ஒருவன் பொதுமக்கள் மீது டிரக் ஓட்டி வந்து மோதியதால் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர் அல்லாஹு அக்பர் என்று கத்தியதால், அவன் தீவிரவாதியாக இருக்ககூடும் என்று சந்தேகத்தின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில், தாக்குதல் நடத்திய நபர் தொடர்பான புகைப்படம் சந்தேகத்தின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நபரின் பெயர் Sayfullo Habibullaevic Saipov (29) எனவும் உஸ்பேகிஸ்தானைச் சேர்ந்த இவன், கடந்த 2010-ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்துள்ளான். அதன் பின் புளோரிடா மாகாணத்தில் தம்பா பகுதியில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்துள்ளான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலுன் இவன் மீது சில வழக்குகள் உள்ளது எனவும், அதில் Missouri மற்றும் Pennsylvania ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மீறிய குற்றங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுளளது.

இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதியை பொலிசார் சுட்டு பிடித்ததால், அவன் நியூயார் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...