ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு: பேஸ்புக் தகவலால் அதிர்ந்த அமெரிக்கா

Report Print Kabilan in அமெரிக்கா

ரஷ்யாவின் பேஸ்புக் பதிவுகள் 12 கோடி 60 லட்சம் அமெரிக்கர்களை சென்றடைந்ததாக வெளியான தகவலால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு படை எப்.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு நாட்களுக்கு முன்னர் இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பேஸ்புக் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் சுமார் 80 ஆயிரம் பேஸ்புக் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன, இது சுமார் 12 கோடியே 60 லட்சம் அமெரிக்கர்களை சென்றடைந்துள்ளது.

மேலும் ரஷ்ய அதிகார மையமான கிரெம்ளினுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள ரஷ்ய நிறுவனம் தான் இந்த பதிவுகளை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பதிவுகள் சமூகம் மற்றும் அரசியலுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் இது பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கைக்கு எதிராக உள்ளதாக பார்க்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...