ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவுடன் தொடர்பு: ஹிலாரி கிளிண்டனை சாடும் டிரம்ப்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவியாக கூறி குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதியான டிரம்ப், ரஷ்யாவுடனான தொடர்பு குறித்த விவகாரத்தில் ஹிலரி கிளிண்டனையும் அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹிலரி கிளிண்டனைத் தோற்கடிப்பதற்கு டிரம்ப்பின் பரப்புரை குழுவுக்கு ரஷ்யா உதவியதாக ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் வேளையில், டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், தனக்கு ஆதரவாக குடியரசு கட்சியினர் இருப்பதாகவும், ரஷ்யாவுடனான தொடர்பு குறித்த விவகாரத்தில் ஹிலரி கிளிண்டனையும் அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், சிலர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...