மன நோயாளியை பாலியல் அடிமையாக பயன்படுத்திய பெண்மணி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை பெண்மணி ஒருவர் பாலியல் அடிமையாக பயன்படுத்தி வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் அமைந்துள்ள மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞருடன் 53 வயதான Christy Lenhardt என்ற பெண்மணி பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

சமூக சேவகரான குறித்த பெண்மணி பல மாதங்கள் அந்த இளைஞரை தமது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து 3 ஆண்டுகள் தம்மை பாலியல் அடிமையாகவே குறித்த பெண்மணி பயன்படுத்தி வந்ததாக குற்றஞ்சாட்டும் அந்த இளைஞர்,

தற்போது குறித்த சமூக சேவகி பெண்மணி மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்துள்ள வாக்குமூலம் விசாரணை அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

மன நலம் பாதிக்கப்பட்ட குறித்த இளைஞரை முதல் 4 மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகவும், அதன் பின்னர் அவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கையில் ஏற்பட்டதால் கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த இளைஞரை மன நல காப்பகத்தில் சேர்ப்பித்துள்ளனர்.

தற்போது இந்த பாலியல் விவகாரம் தொடர்பில் அந்த காப்பகத்தில் பணியாற்றி வந்த 2 மருத்துவர்கள் மீதும் வழக்கு பதிந்துள்ள அதிகாரிகள், சமூக சேவகி Christy Lenhardt என்ற பெண்மணியை பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்