மகனை சுட்டுக் கொன்ற குற்றவாளியை கட்டி அணைத்த தந்தை: கண்கலங்கிய நீதிபதி

Report Print Santhan in அமெரிக்கா
3385Shares
3385Shares
ibctamil.com

அமெரிக்காவில் மகனை சுட்டுக் கொன்ற குற்றவாளியை மன்னித்துவிட்டதாக கூறி மகனின் தந்தை அவனை கட்டி அணைத்த சம்பவம் நீதிபதியை கண்கலங்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியில் கடந்த 2015-ஆண்டு சலாவுதீன் ஜிட்மவுட்(22) எனும் பீட்ஸா விநியோகிக்கும் நபரிடம் இருந்ததை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றதுடன், அவரை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு சென்றனர்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த வேளையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்தனர்.

அதன் பின் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது, நீதிமன்றமும் ஒருவர் குற்றவாளி என்று கூறி அவனுக்கு 31-ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதைக் கண்ட அவர், குற்றவாளியை கட்டி அணைத்துக் கொண்டு தந்தை, தமது மகன் மற்றும் மனைவி சார்பில் மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தைக் கண்ட அங்கிருந்த நீதிபதி உட்பட பலரும் கண்கலங்கியுள்ளனர்.

இது குறித்து சலாவுதினின் தந்தை கூறுகையில், குரான் அமைதியையே வலியுறுத்துவதாகவும், இதனால் அவரை மன்னித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்