கொலை வழக்கில் சிக்கிய இளம்பெண்ணை விடுவிக்க பெருகும் ஆதரவு: காரணம் என்ன?

Report Print Arbin Arbin in அமெரிக்கா
233Shares
233Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் இளம்பெண்ணை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரபலங்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள Cyntoia Brown(29) என்பவரையே கொலை வழக்கில் இருந்து விடுவிக்க பிரபலங்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறித்த இளம்பெண்ணுக்கு 16 வயது இருக்கும்போது Kutthroat என அறியப்படும் நபர் ஒருவர் கடத்தி பல நாட்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய பின்னர் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஆலன்(43) என்பவர் குறித்த இளம்பெண்ணை கடத்திய நபரிடம் இருந்து பாலியல் அடிமையாக பயன்படுத்தும் பொருட்டு பணத்திற்கு வாங்கியுள்ளார்.

ஆனால் அந்த நபரும் தமது நண்பர்களுக்கு குறித்த இளம்பெண்ணை விருந்தாக்கியுள்ளார்.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட Brown வாய்ப்பு அமைந்த போது, ஆலன் என்பவரின் துப்பாக்கி மற்றும் பணப்பையை எடுத்துக் கொண்டு அவரையும் சுட்டுக் கொன்று விட்டு தப்பியுள்ளார்.

இந்த வழக்கில் கைதான இளம்பெண்ணுக்கு 51 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

இந்த நிலையில் குறித்த இளம்பெண்ணின் வாழ்க்கை வரலாறை குறும்படமாக தயாரித்து, அவருக்கு நீதி வழங்க வேண்டும் என அமெரிக்காவின் முக்கிய பகுதிகளில் திரையிடப்பட்டது.

தற்போது அவருக்கு ஆதரவாக பிரபல தொலைக்காட்சி நட்சத்திரம் கிம் காதர்ஷியன், பாடகி ரிஹானா உள்ளிட்ட பல பிரபலங்கள் களமிறங்கியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்