சுறா தாக்கி இந்திய வம்சாவளி பெண் உயிரிழப்பு: கடலில் விளையாடிய போது விபரீதம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் ஸ்கூபா நீச்சல் விளையாட்டின் போது சுறா தாக்கியதில் இந்திய வம்சாவளி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் கோஸ்டா ரிக்கா தீவுக்கு கடந்த வியாழக்கிழமை 18 பேர் அடங்கிய குழு ஒன்று ஸ்கூபா நீச்சல் விளையாடுவதற்காக சென்றுள்ளது.

அந்த குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 49-வயது ரோஹினா பந்தாரியும் ஒருவர். இவர் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான வில்பர் ரோஸ் தொடங்கிய டபில்யூ.எல். ரோஸ் & கோ நிறுவனத்தின் மூத்த இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

அவர்கள் சென்ற பகுதி அதிக அளவிலான சுறாக்கள் காணப்படும் பகுதி என கூறப்படுகிறது. இந்நிலையில், ரோஹினா பந்தாரி ஸ்கூபா நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சூறா அவரை தாக்கியது.

இதையடுத்து அவரது பயிற்சியாளர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இந்த முயற்சியின் போது அவரையும் சுறா தாக்கியது.

இந்த தாக்குதலில் இருவரும் பலத்த காயமடைந்தனர். சுறா தாக்கியதில் ரோஹினா பந்தாரியின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டன.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரோஹினா பந்தாரி நேற்று உயிரிழந்தார். இந்தியாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் ரோஹினா பந்தாரி. இந்த மாதம் தனது 50-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தமது பேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்