பள்ளிக்கூடத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: கொலையாளி உள்ளிட்ட மூவர் பலி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்க பள்ளிக்கூடத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 15 பேர் காயம் அடைந்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

நியூ மெக்சிகோவின் அஸ்டக் நகரில் அமைந்துள்ளது அஸ்டக் உயர்நிலை பள்ளி. இங்கு நேற்று ஒரு மர்ம நபர் நுழைந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான்.

இதில் இரண்டு டீன் ஏஜ் நபர்கள் உயிரிழந்ததுடன் 15 பேர் காயம் அடைந்தனர். தாக்குதலை நடத்திய மர்ம நபரும் உயிரிழந்துள்ளார்.

அவர் பொலிசாரால் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

சம்பவத்தையடுத்து பள்ளியில் இருந்த அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்காவின் தனி எல்லை பிரிவான நவாஜோ தேசம் தலைவர் ரூசல் பெகயி கூறுகையில், பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது மிக பெரிய சோக நிகழ்வாகும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 3700 சிறுவர்கள் மற்றும் டீன் ஏஜ் நபர்கள் துப்பாக்கி சூட்டால் காயமடைந்துள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்