அந்த நாட்டிற்கு போகாதீங்க..ஆபத்து காத்திருக்கிறது: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்கா தன் நாட்டு குடிமக்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முக்கியமில்லாத பயணங்களை பாகிஸ்தானிற்கு மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அது வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாகிஸ்தானிற்கு அமெரிக்கர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும், அங்கு பயங்கரவாதிகள் பல்வேறு தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அமெரிக்கர்களை தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்துகின்றனர், கடந்த காலங்களில் அமெரிக்க தூதர்கள் மற்றும் தூதரக அலுவலர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளது, இதனால் பாகிஸ்தானிற்கு முக்கியமில்லாத பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளின் தாக்குதல் அடுத்து வரும் காலங்களில் தொடருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அமெரிக்கர்களை அவர்கள் கடத்தவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அமெரிக்க குடிமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers