பத்திரிக்கையாளரை வெளுத்து வாங்கிய டிரம்ப்: மன்னிப்பு கேட்ட தருணம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்ட கூட்டத்தில் யாருமே இல்லாத போன்ற புகைப்படத்தை பதிவேற்றம் செய்த பத்திரிக்கையாளரை டிரம்ப் வசைபாடியுள்ளார்.

அமெரிகாவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சாகோலா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது இந்த கூட்டத்தில் ஆளே இல்லாத போன்ற புகைப்படத்தை பிரபல ஆங்கில நாளிதழின் பத்திரிகையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைக் கண்ட டிரம்ப் இது நான் கூட்டத்திற்கு வருவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம், ஆயிரக்கணக்கானோர் உள்ளே வருவதற்காக காத்துக் கொண்டிருந்தனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது, அதுமட்டுமின்றி இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்த நபரை அந்த செய்தி நிறுவனம் பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதை அறிந்த சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டதுடன், அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்தும் நீக்கியும் உள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers