24 ஆண்டுகளாக உறைநிலையில் இருந்த கரு! அழகான பெண்குழந்தையாக பிறந்த அதிசயம்

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவில் 24 ஆண்டுகளாக உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கரு மூலம் பெண் ஒருவர் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அமெரிக்காவின் டென்னசி பகுதியை சேர்ந்த தம்பதி பெஞ்சமின் கிப்சன்- டினா கிப்சன்.

டினாவுக்கு கடந்த மாதம் 25ம் திகதி அழகான பெண் குழந்தை பிறந்தது,எம்மா ரென் என குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், 6 பவுண்டுகள் எடையுடன் உள்ளது.

இதில் அதிசயம் என்னவென்றால் 24 ஆண்டுகளுக்கு முன்பே கரு உருவாகி உறைநிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தேசிய கருதான மையம் வெளியிட்டுள்ள தகவலில், 1992ம் ஆண்டு முதல் கரு பாதுகாக்கப்பட்டு வந்தது.

24 ஆண்டுகளாக உறைநிலையில் இருந்த கரு, டினாவின் கருப்பை குழாய்க்குள் செலுத்தப்பட்டது, கிட்டத்தட்ட டினா பிறந்து 18 மாதங்கள் கழித்து உருவான கருவை சுமந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பலரும் கருவை தானமாக அளிக்க முன்வருவார்கள் என தேசிய கருதான மையத்தின் இயக்குனர் ஜெப்ரி கென்னன் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers