அமெரிக்காவின் கனவு பலிக்காது: வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அணு ஆயுத சோதனையை நிறுத்தும் எண்ணம் ஒருபோதும் கிடையாது என வடகொரியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

வடகொரியா மீது புதிதாக மேலும் ஒரு பொருளாதார தடை விதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, வடகொரியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை உலக நாடுகள் குறைத்துக் கொள்ளவதுடன், தங்கள் நாட்டில் உள்ள வடகொரிய தொழிலாளர்களை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் திருப்பியனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகொரியா விடுத்துள்ள அறிவிப்பில், ஐ.நா விதித்துள்ள பொருளாதார தடை வடகொரியாவின் இறையாண்மை எதிரான நடவடிக்கை ஆகும்.

இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் அமைதியை சீர்குலைத்து போர்சூழலை உருவாக்கியுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் அணு ஆயுத சோதனையை நாங்கள் கைவிட்டுவிடுவோம் என அமெரிக்கா எண்ணுகிறது, ஆனால் அமெரிக்காவின் கனவு ஒருபோதும் பலிக்காது.

பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளோம், அதை கைவிட்டு விடும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்