நொடிப்பொழுதில் நடந்த துயரச் சம்பவம்: தற்கொலைக்கு முயன்றவரின் திக் திக் நிமிடங்கள்

Report Print Harishan in அமெரிக்கா

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பெரு மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 15-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள நபர் ஒருவர் முயற்சி செய்துள்ளார்.

அவருடைய வருங்கால மனைவியின் கண் முன்னே இந்த சம்பவம் நடை பெற்றதால் அவரை காப்பாற்றும் முயற்சியில் அந்த பெண் இறங்கியுள்ளார்.

சில மணித்துளிகள் பால்கனியில் தொங்கியபடியே இருந்தபோது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், அவர்களை காப்பாற்றும் முய்ற்சியில் இறங்கியுள்ளனர்.

அப்போது தன்னலமற்ற மீட்புபடை வீரர் ஒருவர் கயிற்றின் மூலம் தொங்கியபடியே அந்த ஜோடியை காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்துள்ளார்.

தொடர்ந்து அந்த நபர் தற்கொலை செய்துகொள்ளபோவதாகவும், தன்னை விட்டுவிடும்படியும் கூச்சலிட்டவாறு இருந்துள்ளார், ஒரு கட்டத்தில் கைதவறி பெண்ணுடன் கீழே குதித்துவிட்டார்.

அப்போது அதிர்ஷ்டவசமாக அந்த பெண் மூன்றாவது மாடியில் நின்றுவிட்ட நிலையில் நபர் மட்டும் பலியானார்.

மேலும் அந்த நபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்