விமர்சனத்திற்கு உள்ளான டிரம்ப் மனைவியின் உடை: விலை என்ன தெரியுமா?

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அணிந்து வந்த உடை விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் புளோரிடாவில் உள்ள பால்ம் கடற்கரையில் அமைந்துள்ள மஸ்-ரா-லாகோ என்னும் இடத்தில், தனது மனைவி மெலானியா டிரம்ப் மற்றும் மகன் பாப்ரான் டிரம்ப் ஆகியோருடன் கொண்டாடினார்.

இந்த விழாவில் பங்கேற்ற மெலானியா, 5,500 டொலர் மதிப்புள்ள உயர்ரக உடையணிந்திருந்தார். எர்டெர்ம் என்னும் ஆடை நிபுணர், இளஞ்சிவப்பு நிறத்தால் ஆன இந்த உடையை வடிவமைத்திருந்தார்.

இது தற்போது, அமெரிக்கர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உடை குறித்து ட்விட்டர் சமூக வலைதளத்தில், பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் மெலானியா அணிந்திருந்த உடை, மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டு அவர் அணிந்திருந்த உடையில், வேலைபாடுகள் சரியான முறையில் செய்யப்படவில்லை என பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்