மகளிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்: தடுப்பதற்காக தந்தை செய்த செயல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் மகளிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற நிலையில் மகளை காப்பாற்ற தந்தை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

நாட்டின் இலினோயிஸ் மாகாணத்தில் உள்ள பியோரியா கவுண்டியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 1-ஆம் திகதி ஜோமக்ஸ் சாலையில் உள்ள வீட்டு கதவை உடைத்து ஆடம் டேனியல் (29) என்ற இளைஞர் உள்ளே நுழைந்துள்ளார்.

வீட்டில் 15 வயதான சிறுமி மற்றும் குடும்பத்தினர் இருந்தார்கள். சிறுமியை நோக்கி சென்ற டேனியல் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து பயந்து போன சிறுமி வீட்டுக்குள்ளேயே தப்பித்து ஓடியுள்ளார். டேனியலை தடுக்க குடும்பத்தார் முயற்சித்தும் முடியவில்லை.

இந்நிலையில் சிறுமி படுக்கையறைக்குள் சென்று கதவை மூடி கொள்ள அங்கு செல்ல டேனியல் முயன்றுள்ளார்.

இதையடுத்து சிறுமியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்த அவரின் தந்தை தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தரையை நோக்கி சுட்டுள்ளார்.

இதில் டேனியல் பயந்து போன நிலையில் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த பொலிசார் டேனியலை கைது செய்த நிலையில் அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers