டிரம்பிடம் உண்மையிலே அணு ஆயுத பட்டன் இருக்கிறதா? வெளியான ஆச்சரிய தகவல்கள்

Report Print Santhan in அமெரிக்கா
179Shares
179Shares
ibctamil.com

வடகொரியா ஜனாதிபதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னிடமும் அணு ஆயுத பட்டன் இருப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்தார்.

வடகொரியா ஜனாதிபதியின் மேஜையில் உண்மையிலே அணு ஆயுத பட்டன் இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் டிரம்பிடம் அது உண்மையில் இருக்கிறதா என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் திகதி பதவியேற்றவுடன், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் அருகில் பெட்டியுடன் இருந்த இராணுவ வீரர் உடனடியாக டிரம்ப் பக்கம் சென்று நின்றார்.

உண்மையில் டிரம்பிடம் அணு ஆயுத பட்டன் என்ற ஒன்று இல்லவே இல்லை எனவும் ஆனால் பிஸ்கட், கால்பந்து என்றழைக்கப்படும் அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்வது தொடர்பான விடயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

பதவியேற்றவுடன் டிரம்பின் அருகில் பெட்டியுடன் சென்ற இராணுவ வீரரின் பெட்டியில் நியூக்ளியர் புட்பால் என்றழைக்கப்படும் அணுசக்தி கால்பந்து தான் அந்த பெட்டியில் உள்ளதாகவும், அமெரிக்கா அணு ஆயுதத்தை ஏவ, அந்தப் பெட்டி எப்போதும் தேவை என்றும் அது எப்பொழுதும் ஜனாதிபதியின் அருகிலேயே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அந்த பெட்டியின் உள்ளே தொடர்பு கருவிகளும், போர்த்திட்டங்கள் அடங்கிய சில ஏடுகளும் இருக்கும். அது விரைவாகத் திட்டமிடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மேலும் திருப்பி தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள், அரிதானவை, மிதமானவை, நன்கு செயல்படுத்தப்படுபவை, என்று மூன்று வகையான இருக்கும் என்று வெள்ளை மாளிகை இராணுவ அலுவலகத்தின் முன்னாள் இயக்குநர், பில் கல்லி கடந்த 1980-ஆம் ஆண்டு கூறியுள்ளார்.

அமெரிக்காவின் அனைத்து பாதுகாப்பபு படைகளுக்கும் தலைமைத் தளபதி ஜனாதிபதி தான், சுருக்கமாகச் சொன்னால், அவர் என்ன சொல்கிறாரோ அது செயல்படுத்தப்படும்.

எனினும், அவரது உத்தரவுகள் செயல்படுத்தப்படாமல் இருக்கவும் சில வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏனெனில் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக, அணு ஆயுதத் தாக்குதல் நடத்த ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களை, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் மறு பரிசீலனை செய்தது.

அப்போது அமெரிக்க ஸ்ட்ரேட்டஜிக் கமேண்ட் முன்னாள் தலைவர் ராபர்ட் கேலர், ஜனாதிபதியின் உத்தரவு சட்டபூர்வமானதாக இருந்தால் மட்டுமே செயல்படுத்துவேன் என்று கூறியிருந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்