புற்றுநோயால் அவதிப்படும் 5 வயது சிறுமி: சோகத்தில் கதறும் உறவினர்- நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
211Shares
211Shares
ibctamil.com

அமெரிக்காவில் தாயார் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது மகள் மற்றும் நரம்பியல் தொடர்பான நோயால் நாட்களை எண்ணிக்கழியும் தமது தந்தை தொடர்பான நெஞ்சை உலுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படத்தில், உலகில் தாம் சந்தித்தவர்களில் மிகவும் வலிமை மிக்க இரு உயிர்கள் இவர்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சாகோலா பகுதியில் குடியிருந்துவரும் குறித்த குடும்பம் தற்போது இருவரது மருத்துவ செலவினங்களுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பென்சாகோலா பகுதியில் குடியிருந்துவரும் Ally Parker என்பவரே தமது 5 வயது மகள் Braylynn Lawhon மற்றும் தந்தை தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டவர்.

நரம்பியல் தொடர்பான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள Sean Peterson வாய் பேச முடியாதவர். புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமது பேரக்குழந்தையின் படுக்கை அருகே இருந்து சோகத்தில் கதறும் காட்சி பார்ப்பவர் கண்களை ஈரமாக்கும் வகையில் உள்ளது.

5 வயதான Braylynn-கு மூளை புற்றுநோய் தாக்கியுள்ளதை மருத்துவர்கள் கடந்த டிசம்பர் 6 ஆம் திகதியே கண்டுபிடித்தனர்.

இதனிடையே நோய் தீவிரமடையும் சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

மிகவும் நெருக்கமானவர்களின் இழப்பை நம்மால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள ஆலி பார்க்கர், ஆனால் தனது பிஞ்சு குழந்தையே முதலில் உலகைவிட்டு பிரிந்து செல்கிறார் என்று எண்ணுகையில் உள்ளம் உடைகிறது என தெரிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் இந்தப் பிஞ்சு உள்ளத்தை நான் புதைக்க இருக்கிறேன் என்பது என்னால் தாங்கிக்கொள்ளும் அளவுக்கும் மிக அதிகம், ஆனால் அதை தாங்கும் வலிமையை எனது மகள் எனக்கு தருவாள் என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி வாரங்கள் அல்லது சில மாதங்களில் எனது தந்தையும் என்னை விட்டு பிரிந்து விடுவார். ஒரே ஆண்டில் எனது இரு நாயகர்களை நான் இழக்க இருக்கிறேன் என அவர் வருத்தமுடன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சிறுமி Braylynn-கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த சில நாட்களிலேயே அதன் தாக்கத்தை குறித்தும், உலகில் எவரும் மீள முடியாத நோய் அது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளது தமது நெஞ்சை உடைத்த தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்