கழிவறையில் பிஸியாக இருந்த கணவன்: சுட்டுக்கொலை செய்த மனைவி

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
717Shares
717Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் கழிவறையில் பிஸியாக இருந்த கணவன், தனது வார்த்தைகளுக்கு செவி கொடுக்காத காரணத்தால் மனைவி அவரை சுட்டுக்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிசோனா மாகணத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் கழிவறையில் இருக்கும்போது, அவரிடம் ஏதோ சொல்ல முற்பட்டுள்ளார். ஆனால் இதற்கு கணவர் செவிசாய்க்கவில்லை.

மறுபடியும், பேசிப்பார்த்துள்ளார், ஆனால் பதில் அளிக்காத காரணத்தால், துப்பாக்கியை எடுத்து கழிவறையின் சுவரை நோக்கி விளையாட்டாக இரண்டு முறை சுட்டுள்ளார். ஆனால், விபரீதமாக குண்டுகள் கணவனின் தலையை தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக அப்பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, ஆனால், வரதட்சணை பிரச்சனையால் அப்பெண்ணின் கணவர் கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் அவரை சுட்டுக்கொலை செய்ததாகவும் வேறு ஒரு தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்